கோட்டாபய கைதாவதைத் தடுக்கும் உத்தரவு நீடிப்பு!

வியாழன் ஜூன் 14, 2018

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, இன்று (14) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் – பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு, கோட்டாபய ராஜபக்ஷ, மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய வழங்கப்பட்ட உத்தரவே இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.