கோவையில் தமிழீழ விடுதலை கருத்தரங்கம்

வெள்ளி அக்டோபர் 16, 2015

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஒன்றே தீர்வு என்றும் கருத்துரைத்து, தமிழர் தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கத்தை வரும் சனிகிழமை அக்டோபர் 17 அன்று மாலை 4 மணிக்கு அரிமா அரங்கம், கலங்கல் பாதை, சூலூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. 

 

அய்.நா. அவையில் நடந்தது என்ன? 

 

அடுத்தது என்ன? என்று விரிவாக செயல்பட திட்டமிடுவோம்! 

 

கருத்துரை:

1.தோழர்.கு.இராமகிருட்டிணன்பொதுச்செயலாளர் த.பெ.தி.க 

2.தோழர் வே.ஈஸ்வரன் இளைஞரணி செயலாளர் மதிமுக

3.தோழர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்

வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் நண்பர்களுடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மே 17 இயக்கம்.