கோவை இளைஞருக்கு ஒஸ்கர் விருது

January 10, 2017

தொழில்நுட்பப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர் ஒஸ்கர் விருதை வென்றுள்ளார். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சீனிவாச பட்டின் மகன் கிரண் பட்(41). அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு, முக பாவனைகளை தொழில்நுட்பப் பிரிவில் மாற்றுவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது கிரண் பட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வியை கோவையில் பயின்ற கிரண் பட், தொழில்நுட்பக் கல்வியை ராஜஸ்தானின் பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். கணிப்பொறி அறிவியலில் டாக்டர் பட்டத்தை அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

'அவெஞ்சர்ஸ்', 'பைரேட்ஸ் ஆப் கரிபீயன்', 'வார்க்ராப்ட்', 'ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7' போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் கிரண் பட் பணியாற்றியுள்ளார்.

பிப்ரவரி மாதம் 11-ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெறும் விருது விழாவில் கிரண் பட் விருதினை பெற்றுக் கொள்ளவிருக்கிறார். முன்னதாக கடந்தாண்டு கோவையை சேர்ந்த கொட்டலாங்கோ லியானுக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
புதன் April 26, 2017

பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டி உள்ளது. 

புதன் April 26, 2017

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளை மார்ச்31 ஆம் திகதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது

செவ்வாய் April 25, 2017

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்