சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

Tuesday January 23, 2018

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழாவில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்திருக்கிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. இதில் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

நடிகர் சல்மான்கான்- அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி, வசூல் சாதனை படைத்த ‘சுல்தான்’ படத்துக்கு 3 விருதுகள் அளிக்கப்பட்டன. அதுபோல், கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.

சிறந்த இயக்குனருக்காக ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கினும், சிறந்த படத்திற்காக ரவி பக்ச்சாண்ட்காவும் பெற்றிருக்கிறார்கள். இது குறித்து இயக்குனர் கூறும்போது, ‘இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பற்றிய கதையில் என்னுடைய பணி உலகளவில் பாராட்டப்பட்டதற்கு பெருமை படுகிறேன். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு சச்சின், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் உதவி புரிந்தார்கள். உலகளவில் இதற்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.