சட்டத்தை நடுநிலையுடன் அமுல்படுத்துவதில்லை!

January 12, 2017

அரசாங்கம் சட்டத்தை நடுநிலையுடன் அமுல்படுத்துவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கைது தொடர்பில் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்… அரசாங்கம் தனக்கு விரும்பிய தரப்பிற்கு சட்டத்தை அமுல்படுத்தும் விதத்தையும் தமக்கு எதிரானவர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தும் விதத்தையும் பார்க்கும் போது பக்கச்சார்பு தன்மை வெளிப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கைதின் போது சட்டம் வளைக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவின் கைது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றது.

விமல் வீரவன்சவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொலிஸார் செயற்பட்டுள்ள விதம் ஆகியனவற்றை பார்க்கும் போது, விமல் வீரவன்ச ஓர் அரசியல் கைதியாகவே தென்படுகின்றார்.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காலத்தில் அமைச்சின் பிரதி அமைச்சராகவும் கூட்டுத்தாபன தலைவராகவும் கடயைமாற்றியவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகளாவர்.

எனினும் இவர்கள் இருவருக்கு எதிராகவும் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குறித்த இருவருக்கு எதிராகவும் எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

அரசாங்கத்திற்கு சார்பானவர்களுக்கு ஆதரவாக சட்டம் அமுல்படுத்தப்படும் விதமும், எதிரானவர்கள் தொடர்பில் சட்டம் வளைந்து கொடுக்கும் விதமும் தெளிவாகின்றது.

அரசாங்கம் நீதியானது என்றால் குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய பிரதி அமைச்சர் மற்றும் கூட்டுத்தாபன தலைவர் ஆகியோரையும் கைது செய்திருக்க வேண்டுமென டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.