சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இல்லை!

Friday August 10, 2018

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு தற்போது சரியான முறையில் செயற்படுவதில்லை என்று பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

இன்று காலை களனி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.  அதேவேளை பொன்சேகாவுடன் அரசியல் செய்வது டை, கோர்ட் காரர்கள் அல்ல என்றும் அவருடன் செல்வோர் மீது சேறு சேறு பூசப்படுவதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எதிராக செயற்பட்ட போதிலும் இதுபோன்றவை இடம்பெறவில்லை என்றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.