சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் வருகையினால் பாரிய நெருக்கடி

புதன் செப்டம்பர் 02, 2015

ஆயிரக்காணக்கான குடியேற்றவாசிகள் கிறிஸ் நாட்டின் நிலப்பரப்பை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லெஸ்பொஸ் தீவில் இருந்தே இவ்வாறு குடியேற்ற வாசிகள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 4 ஆயிரத்து 200 பேர் இவ்வாறு இரண்டு கப்பல்களில் நேற்று இரவு சென்றுள்ளனர்.

 

ஐரேப்பிய ஒன்றிய நாடுகள் முன்னறிவித்தல் இன்றிய சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் வருகையின் காரணமாக பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டுள்ளன. பெரும்பாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே ஆயிரக்காணக்காவர்கள் இடம்பெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த வாரத்தில் மாத்திரம் ஐரோப்பிய ஒன்றிய எல்லைப்பகுதியை 23 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் கடந்து சென்று கிறிஸை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கிறீசுக்கு சென்றுள்ளனர்.