சத்தான சுவையான கறிவேப்பிலை சட்னி!

சனி சனவரி 05, 2019

கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கறிவேப்பிலையை வைத்து எளிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருள்கள் :

கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு 

மிளகாய் வத்தல் - 5
தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி 
புளி - பாக்கு அளவு 
பூண்டு பற்கள் - 6
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க :

நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு. 

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு. 

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.

வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.

ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். 

சுவையான கறிவேப்பிலை சட்னி  தயார்.
இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.