சபாநாயகரின் தீர்மானம் நிராகரிப்பு!

Friday August 10, 2018

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என, சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிரணி நிராகரித்துள்ளது. சபாநாயகரின் இந்த தீர்மானமானது, நியாயமற்ற, ஜனநாயகமற்ற ஒரு செயலாகும் என, எதிரணி தெரிவித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மை எதிரணியாக தாம் இருப்பதாக குறிப்பிட்டு ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றில் இன்று (10), சபாநாயகரின் அறிவிப்புக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.