சமூக வலைத்தளங்களுக்குப் புதிய கட்டுபாட்டு விதிகள்!

புதன் மார்ச் 14, 2018

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், மற்றும் ஏனைய வலைத்தளங்கள் அனைத்திற்கும் புதிய கட்டுபாட்டு விதிகள் விதிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) கொழும்பு இசிபத்தன கல்லூரியில் நடைபெற்ற, நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி அடுத்த வாரத்திலிருந்து, பேஸ்புக் உள்ளிட்ட ஏனைய வலைத்தளங்கள் அனைத்தும் புதிய கட்டுபாட்டு விதிகளுக்கு அமைவாகவே இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.