சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டைச் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – யப்பானில் மைத்திரிபால சிறிசேன

March 14, 2018

சமூக நலனைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்ட மாட்டாது எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டாலும் அவை தொடர்பான புதிய செயற்றிட்டம் ஒன்று விரைவில் உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

ஜப்பானிற்குச் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன அங்கு வசிக்கும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களை  டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் நேற்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் கருத்துக் கூறுகையில், 

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும். சமூக நலனை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோவதில்லை.

கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன மனித சமுதாயத்தின் நன்மை கருதியே உருவாகின. அவற்றினூடாக உலக அறிவினை பெற்றுக்கொள்ள முடியுமாயினும், துரதிஷ்டவசமாக சிலர் இந்த வளங்களை நாட்டை சீரழிப்பதற்காகவே உபயோகிக்கின்றனர்.

ஆகையினால் இந்த வளங்களை உரிய முறையில் உபயோகிப்பதற்கான புதிய செயற்திட்டமொன்றினை எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். இதன்பொருட்டு அரசாங்கமும், நாட்டு மக்களும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளனர். 

தேசிய ஒற்றுமையை இல்லாது செய்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல், தனிப்பட்ட நபர்களின் தன்மானத்திற்கு ஊறு விளைவித்தல் போன்றவற்றை இல்லாதுசெய்து சிறந்த ஆரோக்கியமான கருத்துக்களை மாத்திரம் பரிமாறிக்கொள்ளுதல் அவசியமாகும். 

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 18, 2018

 சுடரொளியில் இணைந்த பல ஊடகவியலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.