சமூக விழிப்புணர்வு இசை அல்பத்தில் இனியா!

யூலை 17, 2017

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இசை ஆல்பத்தில் நடித்திருக்கும் நடிகை இனியாவுக்கு சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘மவுனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த இனியா தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘மியா’ என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார். அபிரஜிலால் - ஜெயன் இணைந்து இணை அமைத்துள்ளனர். அருண் நந்தகுமார் நடன காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

இந்த இசை ஆல்பத்தில் இனியா துணை இயக்குநராக பணியாற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

செய்திகள்
வெள்ளி June 29, 2018

60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி