சம்பந்தரின் வழியில் தேசத்துரோகிகளுடன் அனைத்துலகத் தொடர்பக நிர்வாகம் உறவாடல்? செயற்பாட்டாளர்கள் - பொதுமக்கள் கொந்தளிப்பு!

நவம்பர் 30, 2017
தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை விலைபேசி விற்கும் இராஜவரோதயம் சம்பந்தரின் துரோகப் பாதையில் அனைத்துலகத் தொடர்பக நிர்வாகம் பயணிக்கின்றதா? என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் சங்கதி-24 இணையத்திற்கு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக செயற்படும் கட்டமைப்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. ஒவ்வொரு நாடுகளிலும் பணிபுரியும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரும் தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது கையொப்பத்துடன் வெளிவரும் அவரது தலைமைச் செயலக அறிக்கைகளை மட்டுமே ஏற்பவர்கள்.
 
தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, கே.பியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற தேசத்துரோகிகளின் கட்டமைப்பை இதன் காரணமாகவே 2009ஆம் ஆண்டு ஆடி மாதம் முதல் தொடர்ச்சியாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் நிராகரித்து வருகின்றார்கள்.
 
இவ்வாறு தேசப்பற்றுடனும், தமிழீழ தேசியத் தலைவர் மீதான விசுவாசத்துடனும், மாவீரர்களைத் தமது ஆன்ம பலமாகவும் கருதிச் செயற்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலேயே கடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் தலைமைச் செயலகம் என்ற தேசத்துரோகிகளின் அறிக்கையை ஒலிபரப்புவதற்கு அனைத்துலகத் தொடர்பக நிர்வாகம் நிர்ப்பந்தித்துள்ளது.
 
எவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேசத்துரோக அரசியலுக்குள் இரா.சம்பந்தர் இட்டுச் செல்கின்றாரோ, அவ்வாறான தேசத்துரோக அரசியலுக்குள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை இட்டுச் சென்று அதனைச் சிதைப்பதற்கே சுவிற்சர்லாந்தில் இருந்தும், டென்மார்க்கில் இருந்தும் அனைத்துலக தொடர்பகத்தை நிர்வகிக்கும் தனிநபர்கள் சிலர் ஈடுபடுகின்றார்கள் என்ற ஐயமே இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ளது.
 
ஜனநாயக வழியில் புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நகர்த்தப்படும் நிலையில், அந்தந்த நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள், பொறுப்பாளர்களுடன் எவ்வித ஆலோசனையும் நடாத்தாது, அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காது, அவர்களின் கருத்துக்கள் எவற்றையும் பெற்றுக் கொள்ளாது சம்பந்தரின் துரோகப் பாதையில் நடந்து கொள்வதை அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கருத்தே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களாலும், பொதுமக்களாலும் சங்கதி-24 இணையத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தவிர தலைமைச் செயலகம் எனப்படும் தேசத்துரோகிகளின் அறிக்கையை மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒலிபரப்புவதற்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைப் பொறுப்பாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டமை பற்றி அனைத்துலகத் தொடர்பகத்தின் இணைப்பாளராக விளங்கும் திரு.பொன்.மகேஸ்வரன் உடனடியாக, அதிகாரபூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என்ற கருத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் முன்வைத்துள்ளார்கள்.
 
இவர்களின் கோரிக்கையை ஏற்றே குட்டி பகை, ஆடு உறவு என்ற கதையாக செயற்படும் அனைத்துலகத் தொடர்பக நிர்வாகிகளின் விபரங்களை வெளியிடுவதை ஓரிரு நாட்களுக்கு நாம் பிற்போட்டுள்ளோம்.
 
அதுவரை தங்களின் கருத்துக்களை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏனைய செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் முன்வைப்பதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: sankathi24@gmail.com
செய்திகள்
வியாழன் August 16, 2018

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ

செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி