சம்மந்தன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Thursday September 13, 2018

விலைவாசி உயர்வினை தாங்கிகொள்ளும் வகையில் எமது மக்களின் நிலை காணப்படவில்லை. இது தொடர்பாக இந் நாட்டின் எதிர் கட்சி தலைவராகவுள்ள சம்மந்தன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வானது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்பதாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தற்போது மாதாந்தம் எரிபொருளின் விலையானது அதிகரித்து செல்கின்றது. அதே போன்று உணவு பொருட்களின் மூலப் பொருட்களும் விலை உயர்ந்து செல்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்து உணவு போன்றனவற்றின் விலைகளும் உயர்வடைந்து செல்கின்றது என்றார்.