சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ராமின் பேரன்பு திரைப்படம்!

வியாழன் சனவரி 25, 2018

தரமணி' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக ராம் இயக்கிவரும் `பேரன்பு' படம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

`தரமணி' படத்தை தொடர்ந்து, ராம் அடுத்ததாக `பேரன்பு' படத்தை இயக்கி வருகிறார். இதில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. 

பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்த படம் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குநர் ராம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் தேர்வாகியுள்ளது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. பேரன்போடு, ராம்.'  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

ராம் நடிப்பில் `சவரக்கத்தி' படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் திகதி  வெளியாக  இருக்கிறது.