சர்வதேச நாடுகளை இலங்கை ஏமாற்றுகிறது!

திங்கள் அக்டோபர் 12, 2015

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை இலங்கை ஏமாற்றி வருகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார். 

 

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  தமிழக மீனவர்களை இந்திய மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். கைதாகும் மீனவர்களை விரும்பும்போது தான் இலங்கை விடுதலை செய்கிறது. 

 

தமிழக மீனவர்கள் குறித்து முதல்வர் எழுதும் கடிதத்தை இந்திய, இலங்கை அரசுகள் கண்டுகொள்வதில்லை. ஐ.நா.,வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து மறுநாளே, அதற்கு இலங்கை ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்தார். 

 

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை இலங்கை ஏமாற்றி வருகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.