சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்க ஜப்பான் ஆதரவளிக்காது – அந்நாட்டு தூதுவர் அறிவித்தார்

Friday March 23, 2018

தமிழ் மக்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இழைத்த குற்றங்களை விசாரிப்பதற்கு  சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை உருவாக்க ஆதரவளிக்க முடியாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. 

கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகுமா இவ்வாறு தெரிவித்தார். 

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஆற்றல் சிறிலங்காவிற்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதித்துறையினரின் பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைக்கு ஜப்பான் அரசாங்கம் ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.