சர்வதேச புலிகள் தினம்!

யூலை 30, 2018

உலகில் உள்ள புலிகளை பாதுகாக்க ஆண்டு தோறும் ஜூலை 29ந்திகதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. மணிக்கு 49 லிருந்து 65 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும். சிங்கத்தைக் கூட தோற்கடிக்கும் ஆற்றல் படைத்தது புலி.

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. உணவுச் சங்கிலியில் முக்கிய இனமாகக் கருதப்படுகிறது. புலிகளைக் கூட்டம் கூட்டமாகக் காண்பது மிகவும் அரிது. புலிகள் ஒரு தனிமை விரும்பி. அதிலும் முக்கியமாக ஆண் புலி பெரும்பாலும் தனியாகத்தான்  வேட்டையாடும். புலிகள் மரம் ஏறும். நீச்சல் அடிக்கும். வேட்டை ஆடுவதில் புலிகளை மிஞ்ச முடியாது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது புலி. 

நம் முன்னோர்கள் புலிகளை நேரடியாகப் பார்த்திருப்பார்கள். தற்போதைய காலத்தில், காடுகளிலோ, புல்வெளிகளிலோ நேரடியாகப் புலிகளை பார்த்தவர்கள் மிகவும் அரிது. டி.வி. சேனல்களிலும், மிருகக் காட்சி சாலைகளிலும் நாம் புலியைப் பார்க்கிறோம். இனி வரும் சந்ததியினர் மிருகக் காட்சி சாலைகளிலாவது புலிகளைப் பார்க்க முடியுமா என்றால், கேள்விக் குறிதான்.

உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின் எண்ணிக்கை  சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. புலிகள் தோலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டது. எனவே 2000-களில் புலிகளின் எண்ணிக்கை 3000-4000 ஆக மாறிவிட்டது. தற்போதைய காலத்தில் எடுத்துக் கொண்டால் உலகிலேயே புலிகள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 60% புலிகள் இந்தியாவில் உள்ளன. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2016ல் அதன்  எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 3,890 புலிகள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 2,226 புலிகள் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்து அதிகளவு புலிகள் உள்ள நாடு ரஷ்யா (433). இவை தவிர இந்தோனேஷியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, பங்களாதேஷில் 106, பூடானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாவோஸ் நாட்டில் வெறும் 2 என்ற விதத்தில் புலிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில்  அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

புதன் August 08, 2018

விழிநீர் பெருக்கெடுத்தோடக் கதறியழுதும்,
நெஞ்சுக்கூடு பிளக்கும் வகையில் நெஞ்சின் மேல் அடித்தும்
நீங்கள் துவளும் காட்சிகள் ஒவ்வொன்றையும்

வெள்ளி யூலை 27, 2018

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன்