சர்வதேச பெண்கள் தினம்!

March 08, 2018

மார்ச் 8 உலகெங்கிலும் வாழும் பெண்களின் உரிமைக்கான நாளாகப் பேணப்படுகின்றது. 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் பிரஞ்சு நாட்டுப் பெண்கள், தங்களுக்கும் ஆண்களுக்கு இணையான உரிமைகள் வேண்டுமெனக்கேட்டுப்போராடி வென்ற நாளே இன் நாளாகும். இதனையே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது.

« பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக-கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகரமான சமுதாயமாக தமிழீழம் அமையவேண்டும் ». என்ற எமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப  பல போராட்டங்களுக்கு மத்தியிலும் பெண்கள் தமது அன்றாட குடும்ப வாழ்க்கையை துணிந்து நடாத்தி வருகின்றார்கள். வீடு பெண்களுக்கு கூடல்ல. எனினும் ,ன்று பலதரப்பட்ட காரணிகளால் வீடு மட்டுமல்ல சமூகச்சூழலுமே எமது பெண்களுக்கு சிறைக்கூண்டாகி விட்டது.

பெண் என்பதற்காகவே குடும்பங்களில் அடிமைகளைப் போன்று நடத்தப்படுவது எல்லா நாடுகளிலும் வழக்கமாகி விட்டது. அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் சரி அடைந்து வரும் நாடுகிளிலும் சரி இதற்கான தீர்வு முழுமையாக கிடைத்து விடவில்லை. இதற்கு எமது தாயகம் என்ன விதிவிலக்கா. கடும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் பெண்களின் நிலமை தீவிர பாகுபாட்டிற்கு இலக்காகி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் பெண் தலமைத்துவக்குடும்ப சுமைகளும். பெண்கள் பல்வேறு வழிகளில் இரண்டாம் தர பிரiஐகளாகவும் சில சந்தர்பங்களில் அதிலும் கீழான இடை நிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள்.

கணவரால் துன்புறத்தப்படுவதும் கைவிடப்பட்டுசெல்வதும் அதனால் இயலாமை என்ற சுமையுடன் குடும்ப தலமைத்துவம் என்ற சுமையையும் பெண்கள் தமது தோள்களில் சுமந்து பரிதவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் பெண்கள் என்பதற்காகவே வெளிப்புற சூழலிலும் தொழிலாற்றும் இடங்களிலும் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவது சகித்துப்போகவேண்டிய யதார்த்தம் என சமாதானப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.

யுத்தத்தினால் தமது அங்கங்களையிழந்த பெண்கள் மிக இலகுவாக பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு இலக்காவது சாதாரணமாகி விட்டது.

ஈழத்துப்பெண்கள் தமது நாட்டுக்காக சொல்ல முடியாத பல தியாகங்களை செய்தவர்கள். அவர்கள் செய்த தியாகங்கள் ஒன்றா இரண்டா ஓராயிரம். ஆனால் இன்று எமது தாய் மண்ணிலோ பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என சிங்கள இராணுவத்தாலும், பல மனித மிருகங்களாலும் மேற்கொள்ளப்பட்டும், ஆதரவற்ற கைம்பெண்களாகவும், யாருமற்ற சிறுமிகளாகவும் மாற்றப்பட்டுள்ளாரகள்.

எமது அன்பான தமிழ் உறவுகளே, குறிப்பாக எமது புலம் பெயர் தமிழீழப் பெண்களே, எமது விடுதலை என்பது ஒப்பற்ற எமது மாவீரர்களின் தியாகத்தினால் வளர்த்தெடுக்கப்பட்டது. எனவே அவர்களின் வழிக்காட்டலில் நின்று அதில் உறுதி கொண்டவர்களாக எமது பெண்ணினத்தின் கண்ணியம் சிதைக்கும் நாசகார சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம், அவர்களை சமூகத்தின் முன் நிறுத்தி நீதி கேட்போம். எமது உரிமைகளையும் மண்ணின் விடுதலையையும் வென்றெடுப்போம் என  இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.  எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத