சவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்!

செவ்வாய் செப்டம்பர் 25, 2018

சவூதி அரேபிய வரலாற்றின் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை வீம் அல் தஹீல் பெற்றுள்ளார். இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி அரியணை ஏறிய பின்னர் விஷன் 2030 என்ற பெயரில் சவூதி அரேபிய சமூகத்தை நவீனமயமாக்கும் நோக்கில் வாகனங்களை ஓட்ட பெண்களுக்கு இருந்த தடையை நீக்கினார்.

 கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி முதல் திரையரங்குகளை செயல்படுத்தினார். இந்நிலையில் அல் சவூதியா தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்பவர் நியமிக்கப்பட்டார்.

 மாலை நேரங்களில் மட்டும் வீம், ஆண் வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண் செய்திகளை வாசித்தார். 

 வீம் அல் தஹீல் மட்டுமே முதல் பெண் செய்தி வாசிப்பாளர் அல்ல. பீச்சர் செய்திகள், காலை செய்தி புல்லட்டிகள், சமையல் ஷோக்கள், வானிலை அறிக்கைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தஹீல் முக்கியமாக இரவு நேர செய்திகளை வாசிப்பதால் அவருக்கு முதல் பெண் வாசிப்பாளர் என்ற பெருமை கிடைத்துள்ளது.