சாட்சிகளை அழிக்க வாய்ப்புகள் உள்ளது!

Sunday September 23, 2018

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி காவல் துறை  மா அதிபர் நாலக டி சில்வா மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளபோதிலும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யாதிருப்பதால், சாட்சிகளை அழிக்கவும் அச்சுறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

நாலக டி சில்வாவை, பதவியில் இருந்து நீக்காது பக்கச்சார்பற்ற விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது ​மேலும் தெரிவித்த அவர், காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பிரதி காவல் துறை மா  அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் கூறினார்.

மேலும், 12 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக காவல் துறை  மா அதிபர் மீது குற்றச்சாட்டும் காணப்படுகின்றது. இவை அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனின் அவர்கள் அந்த பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இவர்களை பதவி விலக்காதிருப்பதால், அரசாங்கம் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.