சாந்தபுரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல்!

ஞாயிறு ஜூன் 24, 2018

வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர்  தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
  இருப்பினும் மற்றயவரை சிறிலங்கா காவல் துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து  காவல் துறையால்  கைது செய்யப்பட்டார்.

 இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு  காவல் துறை  மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  அழைத்து வரப்பட்ட அவர் அங்கு உள்ள பகுதிகளில் ஆயுதங்கள் இருக்கலாம் என  தேடுதல் நடைபெற்று வருகிறது.
 
 குறித்த பகுதிக்கு இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் இதுவரை எவ்வித ஆயுதங்களோ வெடிபொருட்களோ மீட்க்கப்படாத நிலையில் இன்று அதிகாலை 1.30 வரை அவரின் வாக்கு மூலங்களுக்கு அமைவாக தேடுதல் தொடர்கிறது.