சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பிரான்ஸ்!

Monday November 27, 2017

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி, பெல்ஜியம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 06-வது சீசன் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கடந்த பிப்ரவரி 3-ன் திகதி தொடங்கியது. இதில் பிரான்ஸ். பெல்ஜியம், பிரட்டன், அர்ஜெண்டினா, சுவிசர்லாந்து உட்பட 16 நாடுகள் கலந்து கொண்டன.

இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு பிரான்ஸ், செர்பியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னேறின. அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் செர்பியாவையும், பெல்ஜியம் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

நேற்று இறுதி சுற்று போட்டிகள் பிரான்சின் லில்லீ நகரில் நடைபெற்றன. பிரான்ஸ் அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் ஜோ-வில்ஃபிரெட் சோங்கா, லூகாஸ் பவுலி, இரட்டையர் பிரிவில் ரிச்சர்டு கஸ்கெட் - பைரி-ஹியுகெஸ் ஹெர்பெர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர். பெல்ஜியம் அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் டேவிட் கோஃபின், ஸ்டீவ் டார்சிஸ், இரட்டையர் பிரிவில் ருபன் பெமல்மான்ஸ் - ஜோரிஸ் டி லோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் லூகாஸ் பவுலியும் டேவிட் கோஃபின்னும் மோதினர். இப்போட்டியில், கோஃபின், 7-5, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இரண்டாவது ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்டீவ் டார்சிஸ்சும், ஜோ-வில்ஃபிரெட் சோங்காவும் மோதினர். இதில் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சோங்கா வெற்றி பெற்றார். இதனால் 1-1 என புள்ளி சமனானது.

அடுத்து நடந்த ஒரே இரட்டையர் பிரிவு போட்டியில் ரிச்சர்டு கஸ்கெட் - பைரி-ஹியுகெஸ் ஹெர்பெர்ட் ஜோடி, 6-1, 3-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

அடுத்ததாக நடந்த ஒற்றையர் பிரிவு போட்டியில் ஜோ-வில்ஃபிரெட் சோங்கா, டேவிட் கோஃபின் ஆகியோர் மோதினர். இதில் 7-6, 6-3, 6-2 என்ற செட்களில் கோஃபின் வெற்றி பெற்றார். இதனால் 3-1 என முன்னிலை பெற்ற பிரான்ஸ் கோப்பையை வென்றது.

இருப்பினும் கடைசியாக நடந்த ஒற்றையர் பிரிவு போட்டியில் லூகாஸ் பவுலி, 6-3, 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ஸ்டீவ் டார்சிஸ்-ஐ வீழ்த்தினார். இதன்மூலம் ஐந்தில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற பிரான்ஸ் டேவிஸ் கோப்பையை 10-வது முறையாக கைப்பற்றியது.

இதுவரை நடந்த 106 தொடர்களில் அமெரிக்கா 32 முறையும், ஆஸ்திரேலியா 28 முறையும், பிரான்ஸ், பிரட்டன் தலா 10 முறையும்  டேவிஸ் கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.