சாரதி அனுமதிப்பத்திர முறையில் மாற்றம்?

Saturday January 13, 2018

சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் போது ஏற்படுகின்ற முறைகேடுகளை குறைக்கும் நோக்கில் சாரதி அனுமதிப்பத்திர முறைமையை மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த குழுவின் இறுதி பரிந்துரை இன்று அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில், குறித்த குழுவானது இறுதியாக சாரதி பயிலுனர் பாடசாலைகளில் கற்பிக்கும் முறையை சீர்திருத்தும் யோசனையொன்றை முன்வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில், வீதி பாதுகாப்பு தொடர்பான சபையின் தவிசாளர் சிசிர கோதாகொட தெரிவிக்கும் போது;சாரதி அனுமதிப்பத்திர முறையை மாற்றுவதற்காக அமைக்கப்பட்ட குறித்த குழு வழங்கும் பரிந்துரைகளை சாரதி பயிலுனர் பாடசாலைகள் நிறைவேற்ற வேண்டும்.அவ்வாறு நிறைவேற்ற நடவடிக்கை எடுப்படாவிடின் குறித்த சாரதி பயிலுனர் பாடசாலைகளின் பயிலுனர் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.