சாலை விபத்தில் 6 பேர் பலி-நெல்லை

ஞாயிறு டிசம்பர் 23, 2018

நெல்லை கங்கைகொண்டான் 4 வழிச்சாலையில் சென்ற வேனும், அரசு பேருந்தும் மோதி விபத்திற்குள்ளானது.  இதனை தொடர்ந்து வாகனங்களில் இருந்த இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வழியே வந்த மற்றொரு வாகனம் இரு வாகனங்கள் மீதும் திடீரென மோதியுள்ளது.  இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார் இந்த விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.