சிங்கப்பூரின் முதல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது

சனி மே 14, 2016

எதிர்கால இணைய பாதுகாப்புச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான சிங்கப்பூரின் முதல் ஆய்வுக்கூடம் நிறுவப்படவுள்ளது. அதை நிறுவுவதற்கு ST Electronicsஉம், சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் ஆலோசித்து வருகின்றன.

அந்தப் பங்காளித்துவ உடன்படிக்கையின் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய பல்கலையின் தலைவர் Thomas Magnanti, இணையப் பாதுகாப்புப் புள்ளிவிவர ஆய்வு, நம்பிக்கைமிக்க இணையக் கண்காணிப்பு மேம்பாடு முதலியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகச் சொன்னார்.

தேசிய ஆய்வு அறக்கட்டளை 44.3 மில்லியன் வெள்ளி கொடுத்து ஆதரவளிக்கிறது. கையெழுத்துச் சடங்கில் கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் Dr Yaacob Ibrahim அரசாங்கமும் ஆய்வுக் கூடத்திற்கு நிதியளிக்கும் என்றார்.