சிங்கள ஒட்டுக்குழுவின் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறை தேடுதல்!

வியாழன் டிசம்பர் 13, 2018

சிங்கள ஒட்டுக்குழுவான தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பலின் கூடாரங்களில் ஒன்றாக ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறையினர் தேடுதல் வேட்டை நிகழ்த்தியுள்ளனர்.

 

கடந்த 24.11.2018 சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இத் தேடுதல் வேட்டை இடம்பெற்றதாக இச் சிங்கள ஒட்டுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

 

இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, சக போராளிகளையும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் காட்டிக் கொடுத்த ஒரு தொகுதி முன்னாள் போராளிகளையும், இந்தியாவில் றோவின் பிடியில் சிக்கி இந்திய உளவாளிகளாக மாறிய இன்னுமொரு தொகுதி முன்னாள் போராளிகளையும் 2009ஆம் ஆண்டின் வெவ்வேறு கட்டங்களில் பிரித்தானிய, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய புலம்பெயர் தேசங்களுக்கு சிங்கள - இந்திய அரசுகள் அனுப்பி வைத்திருந்தன.

 

இவ்வாறு இந்தியாவில் இருந்து இந்திய புலனாய்வு அமைப்பான றோவால் அனுப்பி வைக்கப்பட்ட சங்கீதன் அல்லது தயாபரன் என்றழைக்கப்படும் அன்ரனி வெலிங்டன் (செட்டிக்குளம், வவுனியா) என்பவரும், கொழும்பில் இருந்து சிங்களப் புலனாய்வுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்ட தும்பன் அல்லது புலவர் என்ற பெயருடைய முன்னாள் கடற்புலிப் போராளியும் பிரித்தானியாவை வந்தடைந்து, அங்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களையும், தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளையும் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Thumpan-Sangeethan

 

இவர்களில் சங்கீதன் அல்லது தயாபரன் என்றழைக்கப்படும் அன்ரனி வெலிங்டனின் தந்தை தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டமைக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

Sangeethan
சங்கீதன் அல்லது தயாபரன் (அன்ரனி வெலிங்டன்)

 

இதனையடுத்து சங்கீதன் அல்லது தயாபரன் என்பவர் இயக்கத்தை விட்டு விலகிச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்தியா சென்று அங்கு றோ நிறுவனத்தின் கைக்கூலியாக மாறினார்.

 

இதே போன்று இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தும்பன் அல்லது புலவர் என்பவர், கடற்புலிகளின் திருகோணமலை அணிகளுக்குப் பொறுப்பாக விளங்கியவர்.

 

Thumpan
தும்பன் அல்லது புலவர்

 

இவருக்குப் பொறுப்பாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி வசந்த் இறுதி யுத்தத்தில் இவரது காட்டிக் கொடுப்புக் காரணமாக சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதோடு, தளபதி வசந்த் அவர்களின் சகாவான திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் அவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டார்.

 

இதன் பின்னரே தும்பன் அல்லது புலவர் என்பவர் சிங்கள அரசால் விடுதலை செய்யப்பட்டு பிரித்தானியாவில் குழப்பம் விளைவிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 

இவ்விரு சிங்கள ஒட்டுக்குழு ஆயுததாரிகளாலும் 2016ஆம் ஆண்டு தமது பினாமிகளின் பெயரில் ஒக்ஸ்போர்ட் காட்டுப்புறத்தில் ஏறத்தாள பதின்மூன்று இலட்சம் பவுண்கள் செலவில் மாட்டுப் பண்ணை ஒன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

 

மாவீரர் நினைவாலயம் அமைக்கப் போவதாகக் கூறி இம் மாட்டுப் பண்ணையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கும்பல் விலைக்கு வாங்கியிருந்தாலும், உண்மையில் இங்கு புதிதாகக் கட்டிடம் எவற்றையும் கட்டுவதற்கு எவ்வித அனுமதியும் இல்லை. அவ்வாறு கட்டிடம் கட்டுவதாயினும், பண்ணை நிலம் என்பதால் அதற்கு அனுமதி கிடைப்பதற்குக் குறைந்தது முப்பது ஆண்டுகளாவது எடுக்கும்.

 

இந்நிலையில் இம் மாட்டுப் பண்ணையில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ஏற்கனவே பிரித்தானியாவாழ் தமிழர்களிடையே செய்திகள் பரவியிருந்த நிலையில், கடந்த 24.11.2018 அன்று இம் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனது முகநூல் ஊடாக ஒப்புதல் வாக்குமூலமளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.