சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம்

யூலை 17, 2017

கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காவற்துறை அதிகாரி தொடர்பில் நீதிமன்ற அறிக்கை கிடைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கி, தப்பிச் செல்ல ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
              

 

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.