சிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 மூன்றாம் நாள் நிகழ்வுகள்!

February 18, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும்  வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் மூன்றாம் நாள்  நிகழ்வுகள் இன்று  சனிக்கிழமை  (17)சிறப்பாக இடம் பெற்றன.

ஆரம்ப நிகழ்வாக  13.05.1984 அன்று  பொலிகண்டியில்  சிறீலங்கா படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த  வீரவேங்கை  பகீன்  உடைய சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கீழ்ப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தனிப்பிரிவுப் போட்டியும், மேற்பிரிவு மற்றும் அதி மேற்பிரிவு களின் குழுப் போட்டியும் இடம்பெற்றன .

இறுதிப் போட்டிகள் நாளை (18) புளோமினில் மண்டபத்தில் நடைபெற்று வன்னிமயில் 2018 விருதும் முதல் மூன்று நாள் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்வர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற உள்ளன.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம