சிறிதரனுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை! - மலையக மக்கள்!

யூலை 17, 2017

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக   வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

இந்த நிலையில் இன்று  கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில்   வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால்  அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியேறியதாகவும் இவ்வாறு தெரிவித்த சம்பவமானது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை எனவும் தெரிவித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் எதிர்கால அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் அவ்வாறு தெரிவித்தமையை (“வடக்கத்தையான்” என நான் சொல்லவில்லை) நிரூபித்தால் பதவி துறப்பேன் கோணாவிலில் எதிர்ப்புத் தெரிவித்து கெள்வி எழுப்பிய மக்கள் முன்னிலையில் சிறிதரன் எம்பி தெரிவித்திருக்கின்றாா்.

ஊடகவியலாளா் ஒருவருக்கு தனது 0776913244 இலக்க தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்டு உரையாடியவா் இப்போது கிராமங்களுக்குச் சென்று உரையாடலில் முதலில் பேசியது தான் எனவும், ஏனைய விடயங்களை பேசவில்லை என்றும் பச்சைப் பொய் சொல்லி வருகின்றாா்.

செய்திகள்