சிறிலங்காவில் சமூக ஊடகங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்

புதன் மார்ச் 14, 2018

சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நிலைமைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாளை (15) வியாழக்கிழமை கொழும்புக்குச் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

கடந்த வாரம் தொடக்கம் நடைமுறையில் இருக்கும் சமூக ஊடகங்கள் மீதான தடை இன்று நீக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.