சிறிலங்காவில் நிதி நெருக்கடி, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரல்

ஞாயிறு சனவரி 13, 2019

சிறிலங்கா நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வதற்கு முனைப்புக்காட்டியுள்ளது. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர குழுவினர் வாஷிங்டன் பயணமாகியுள்ளனர்.

நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் சிறிலங்காவுக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்காவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் குழப்பங்கள் காரணமாக அதிகளவான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வீண் செலவுகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் சிறிலங்காவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.