சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

நவம்பர் 03, 2017

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 

பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படாமைக்கு காரணம் என்ன ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேன் லம்பேர்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று புதிதாக அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்திருந்த போதிலும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்திகள்