சிறிலங்கா அமைச்சரவையில் 23 ஆம் திகதி முழுமையான மாற்றம்

April 16, 2018

சிறிலங்காவில் எதிர்வரும் 23 ஆம் திகதி முழமையான அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மாத்திரம் மாற்றங்கள் செய்யப்பட்டன. 

அதனைத் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் காட்சியிலும் மாற்றங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி அறிவித்தார். என்றாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால்  அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகினர். இதன்போது அமைச்சரவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மாற்றியமைக்கப்படும் என கூறப்பட்டது. என்றாலும் முக்கியமான அமைச்சுகள் நான்கு மாத்திரமே தற்காலிகமாக நியமிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்கையில்,  கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால், பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (15) பிரித்தானியா சென்ற ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி அமைமச்சரவை மாற்றம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த இரண்டு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளைப் பதவி விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்குப் பதிலாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் ஐதேகவைச் சேர்ந்த மேலும் மூவருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்து ஜனாதிபதியுடன், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான ஐ.தே.க குழுவினர் பேச்சு நடத்தியுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனநாயக்க, பாலித ரங்க பண்டார, ரஞ்சித் அலுவிகார ஆகியோருக்கே அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐதேக தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.

ஞாயிறு June 24, 2018

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம்