சிறிலங்கா அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை குறைந்துள்ளது

March 13, 2018

சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளை நோக்கும்போத நம்பிக்கையீனமாக உள்ளது என மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளை மதகலவரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அது கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமான செயற்பாடு என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை ஏனையவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுக்கத் தயங்கமாட்டார்கள். 

புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் நம்பிக்கையை குறையச் செய்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் சிறிலங்காவால் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாது. 

செய்திகள்
சனி யூலை 21, 2018

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.