சிறிலங்கா அரசு ஐ.நாவுக்கு 2015 இல் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை, ஐ.நா கண்டனம்

March 12, 2018

சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் குற்றம் சுமத்தியுள்ளார். 

மூன்று நாள்கள் பயணமாக சிறிலங்காவுக்குச் சென்றிருந்த அவர் நேற்று (11) தமது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார். 

அவரது பயணம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகம் விரைவாக சுயாதீனமாக இயங்கும் எனத் எதிர்பார்ப்பதாக ஜெப்ரி பெல்ட்மன் கூறினார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் அலுவலகத்துக்கு புதிதாக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை நம்பிக்கையூட்டுவதாக இருப்பதாகவும் விரைவில் இந்த குழு காணாமல்போனோரது உறவினர்களின்  நீண்டகால கேள்விகளுக்கு பதில் வழங்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார்.

மேலும் 2015ம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் அமுலாக்கப்படாமைக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் உறுதிமொழிகள் உரிய வகையில் நேரசூசியுடன் அமுலாக்கப்பட வேண்டும். 

அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டிப்பதுடன் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிக்கவும் ஆவண செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

வனவள விலங்கை துன்புறுத்துவது எந்தளவு தூரம் சட்டப்படி தவறான விடயமோ அவ்வாறான விலங்குகளை கூட்டில் அடைந்து அனுமதியின்றி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பதும் தவறான விடயமே என்று தமிழ்த் தேசியக் க

திங்கள் யூலை 16, 2018

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.