சிறிலங்கா பிரதமர் ரணில் வடதமிழீழத்திற்கு விஜயம்

May 19, 2017

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடதமிழீழத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றடைந்தார். 

உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த அவர் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இறங்கினார். அவரை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் யாழ்.மாவட்டச் செயலக அதிகாரிகளும் வரவேற்றனர். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் மேலும் சில கூட்டங்களிலும் அவர் பங்குபற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சர் சாகல ரத்னாயக்கா மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் பங்குபற்றுவர். 

 

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

வஸ்கமுவ தேசிய வனாந்தர, வனஜீவராசிகள் காரியாலயத்தின், ஆயுத அறையை, இனந்தெரியாத நபர்கள் உடைத்து