சிறிலங்கா – இந்­திய இரா­ணுவ கூட்டுப்பயிற்சி!

ஒக்டோபர் 13, 2017

சிறிலங்கா  இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இடை­யி­லான ‘மித்ர சக்தி- 2017' கூட்டுப் பயிற்சி, இன்று (13) வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­தி­யாவின் புனே நகரில் அமைந்­துள்ள அவுண்ட் இரா­ணுவ முகாமில் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்­ளது.

சிறந்த இரா­ணுவ நடை­மு­றை­களை  இரு நாடு­க­ளுக்கும் இடையில் பரி­மா­றிக்­கொள்­வதும் இரா­ணு­வங்­க­ளுக்­கி­டை­யி­லான பல­மான இரா­ணுவ உற­வு­களை கட்­டி­யெ­ழுப்­பு­வதும் இந்தக் கூட்டுப் பயிற்­சியின் நோக்கம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐந்­தா­வது வரு­ட­மாக தொடர்ந்து நடத்­தப்­ப­ட­வுள்ள மித்ர சக்தி கூட்டுப் பயிற்­சியில், கிளர்ச்சி முறி­ய­டிப்பு, தீவி­ர­வாத முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­களில் முக்­கிய கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இரண்டு வாரங்கள் நடக்­க­வுள்ள இந்தப் பயிற்­சியில் ஆயுதப் பயிற்சி, அடிப்­படை இரா­ணுவ தந்­தி­ரங்கள் மற்றும் தளச்­சமர் மூலோ­பா­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இடம்­பெறும்.

எதிர்­வரும் 25 ஆம் திகதி நடை­பெறும் இந்த இரா­ணுவ இறுதி ஒத்­திகை நிகழ்வில் சிறிலங்கா, இந்­திய இரா­ணுவ கண்­கா­ணிப்­பா­ளர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

தெற்­கா­சி­யா­விலும் இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்­திலும் தமது ஆதிக்­கத்தை அதி­க­ரிக்கும் சீனாவின் முயற்­சி­க­ளுக்கு பதிலளிக்கும் வகையில், ‘மித்ரசக்தி’ என்ற இராணுவக் கூட்டுப் பயிற்சியை 2012 ஆம் ஆண்டு இந்தியா ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்