சிறீலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர்

April 16, 2017

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயயணத்தின் போது, சிறீலங்கா அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா, எதிர்வரும் 21ஆம் நாள் கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், பிரெக்சிற்குப் பிந்திய உலகின் சவால்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சராக அலோக் சர்மா பதவியேற்ற பின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

 

செய்திகள்