சிறுநீரகக் கற்களை கரைக்கும் காய்கறிகள்!

March 04, 2018

சிறுநீரகக் கல் பிரச்சினை சிலரை பாடாய்ப்படுத்தும். ஆனால் சில காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே சிறுநீரகக் கற்களைக் கரைக்கலாம். 

அந்தக் காய்கறிகள் பற்றி... 

* கரட், பாகற்காயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை சிறுநீரகக் கற்களைப் படியவிடாமல் தடுத்து, அவற்றைக் கரைக்கவும் உதவுகின்றன. 

* வாழைப்பழம், எலுமிச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, சிட்ரேட் ஆகிய சத்துகள், சிறுநீரகக் கற்களின் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதைச் சிதைத்து, படியவிடாமல் தடுக்கின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடை போடுகின்றன. 

* அன்னாசிப் பழத்தில் சிறுநீரகக் கற்களின் ‘பைப்ரினை’ சிதைக்கும் நொதிகள் உள்ளன. எனவே இப்பழம் எளிதில் சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். 

* கொள்ளு, பாதாம்பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவையும் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும். 

* சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அதோடு, சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* சிறுநீரகக் கல்லால் தவிப்பவர்கள் பாஸ்பேட் மிகுந்த காபி, டீ, பிளாக் டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

* அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

செய்திகள்
திங்கள் செப்டம்பர் 10, 2018

டிஎன்ஏவில் இருந்த திராவிட அடையாளம்.. ஹரியானா தொல்பொருள் ஆய்வில் அதிசயம்!