சிறு கண் அசைவால் இணையத்தை கலக்கும் ப்ரியா வாரியர்!

February 12, 2018

ப்ரேமம், ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு `மாணிக்ய மலராய பூவி' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், அந்த பாடலில் வரும் ப்ரியா வாரியர் சமூக வலைதளத்தில்  இருக்கிறார். 

சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் ப்ரியா வாரியர்.

மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்', `சங்ஃஸ்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காணொளி பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் திகதி படக்குழு வெளியிட்டுள்ளது. 

`மாணிக்ய மலராய பூவி' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். 

ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் ப்ரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. 

அதுமட்டுமில்லாமல் ப்ரியா வாரியருக்கென தற்போது ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது. 3 நாட்களில் இந்த காணொளியை யூடியூப்பில் சுமார் 48 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் இந்தகாணொளியை லைக் செய்துள்ளனர். யூடியூப்  இல்  இந்த பாடல் முதலிடத்தில் உள்ளது. பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

அந்த காட்சியில் வரும் ப்ரியா வாரியரை 3 நாட்களில் 17 ஆயிரம் பேர் பின்பற்ற ஆரம்பத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.