சிவகார்த்திகேயனோடு கைகோர்க்கும் சிம்ரன்

June 16, 2017

சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். 

இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். காமெடி வேடத்தில் வழக்கம்போல் சூரியே நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும், நெப்போலியனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

இதில் சிவகார்த்திகேயன், சூரி, நெப்போலியன், சிம்ரன், இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் டி.இமான், ஆர்.டி.ராஜா, கவிஞர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 12-வது திரைப்படமாகும். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

செய்திகள்
வெள்ளி May 18, 2018

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.