சிவகார்த்திகேயன் மகள் பாடிய பாடல்: 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது!

Thursday October 18, 2018

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய 'வாயாடி பெத்த புள்ள" பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள முதல் படம் 'கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இவர், சிவகார்த்திகேயனின் கல்லூரித் தோழர்.

கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மகள் - அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் அப்பா. இதுதான் இந்தப் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை, ஜிகேபி எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி இருவரும் பாடிய இந்தப் பாடலின் ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் லிரிக்கல் காணொளி, கடந்த மாதம் 24-ம் திகதி யூ டியூபில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல், இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

'கனா' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ட்ரெய்லர் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.