சிவாஜி கணேசன் சிலை அகற்றம்!

August 03, 2017

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை காவல் துறை  பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.  நடிகர் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டு இருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 1 மணியளவில் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகளை காவல் துறையினர் அமைத்தனர். பின்பு நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அதிகாலையில் பத்திரமாக அகற்றப்பட்டது

அகற்றப்பட்ட இந்த சிலையானது அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. மணிமண்டபத்தை விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

செய்திகள்
வெள்ளி August 11, 2017

இந்தியாவின்  13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.