சி.வி. எங்களை சந்திக்க வேண்டும் -முள்ளிக்குளம் மக்கள் கோரிக்கை.

April 20, 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் தம்மை வந்து சந்திக்க வேண்டும் என முள்ளிக்குளம் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று இருபத்தி எட்டாவது நாளாகவும் முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நேற்றைய தினம் தமில்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,

சார்ல்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர்களான பிரிமுஸ் சிராய்பா, எஸ்.குணசீலன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை சொந்த கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி முதல் இரவு பகல் பாராது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்றைய தினம் இருபத்தி எட்டாவது நாளை எட்டியிருந்தது. போராட்டம் நடைபெறும் காலப்பகுதியில் அப்பகுதியிலேயே சமைத்து உணவு உண்டு வருகின்றனர். இந்த மக்களை பல்வேறு தரப்பினரும் சென்று சந்தித்து வருகின்ற நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் தம்மை இதுவரை சந்திக்க வராமல் இருப்பது கவலையளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எமது நிலைமைகள் தொடரில் விளக்கமளித்து அவரை அழைத்து வருமாறு பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களிடம் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,  எமது உரிமைகள் காலம் காலமாக மறுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது. அவற்றை பெறுவதற்கு நாங்கள் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையே உள்ளது. நிலவிடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கூட மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெளிவாக எடுத்து கூறியிருந்தார். அதனை பாதுகாப்பு அமைச்சரும் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் எமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். மக்கள் தாமாகவே வந்து போராடுவது வரவேற்கத்தக்கதாகும். இந்த காணிகள் விடுவிப்பு தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகத்திலும் எதிவரும் இருபத்தி எட்டாம் திகதி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். எதுவாக இருந்தாலும் மக்கள் போராட்டங்கள் மூலம் எல்லாவறையும் சாத்தியமாக்குகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார். 

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.

ஞாயிறு June 24, 2018

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம்