சீனிக்காக கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு!

Friday October 12, 2018

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் வௌ்ளைச் சீனிக்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதி செய்யப்பட்ட வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலையாக 105 ரூபா என்றும், பொதி செய்யப்படாத வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலையாக 100 ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் அதிகபட்ச மொத்த விற்பனை விலையாக 92 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.