சீன ஓபன்: கிர்ஜியோஸை வீழ்த்தி நடால் சாம்பியன்

ஒக்டோபர் 08, 2017

சீன ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடாலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கார்சியாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.  சீன ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடாலும், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் நடால் 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய சிமோனா ஹாலெப் - கார்சியா பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் செட்டை கார்சியா 6-4 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் ஹாலெப் ஈடுகொடுத்து விளையாடியதால் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் கார்சியா 7(7) - 6(3) எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஹாலெப், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

செய்திகள்