சீன ராணுவம் ‘திடீர்’ போர் பயிற்சி

யூலை 17, 2017

அருணாசல பிரதேசம் எல்லை அருகில் சீன ராணுவம் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்ற பயிற்சிகளை சீனா மேற்கொண்டது.

இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே பூடான் எல்லை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்திய எல்லையை நோக்கி சீன ராணுவம் பூடானில் சாலை அமைத்ததால் சர்ச்சையும் பதட்டமும் அதிகரித்துள்ளது. அங்கு இந்திய ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அருணாசல பிரதேசம் எல்லை அருகில் சீன ராணுவம் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டது. அருணாசல பிரதேசத்தை திபெத்தின் தென் பகுதி என்று கூறி வரும் சீனா, அதை ஆக்கிரமிக்க போவதாக மிரட்டல் விடுத்தப்படி உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் சீனா நடத்திய போர் பயிற்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் பயிற்சி சுமார் 11 மணி நேரம் நீடித்தது. போர் பயிற்சியின் போது விமானத்தை சுட்டு வீழ்த்தியது போன்ற பயிற்சிகளை சீனா மேற்கொண்டது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

செய்திகள்