சீரற்ற காலநிலையால் விமானங்கள் மத்தளைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டது

Monday July 16, 2018

சீரற்ற காலநிலை காரணமாக மும்பாய் மற்றும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்டுள்ளது.

மும்பாயிலிருந்து வந்த யூ.எல் 142 விமானம் காலை 5.52 மணியளவிலும், டுபாயிலிருந்து வந்த யூ.எல் விமானம் 5.48 மணியளவிலும் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக மத்தளை விமான நிலை கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதும் இன்று 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் பலத்த காற்றின் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதுடன் பலத்த காற்று மழை வீழ்ச்சி காரணமாக கடலுக்குச் செல்லும் மீனவர்களையும் மக்களையும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.