சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை அதிகரிக்க நடவடிக்கை!
புதன் செப்டம்பர் 19, 2018

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்காக வழங்கும் வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பதற்கு, கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நீண்ட காலமாக பரீட்சிக்கப்பட்ட ஆய்வுக்குப் பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவா வித்தாரன தெரிவித்துள்ளார்.
தற்போது 550 ரூபா, 800 ரூபா, 1,000 ரூபா மற்றும் 1,350 ரூபா போன்ற பெறுமதியான வவுச்சர்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தீர்மானத்திற்கு அமைய, இவற்றின் பெறுமதிகள் அதிகரிக்கப்படும்.
இந்த வருடத்திலிருந்து இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், ஒக்டோபர் மாதத்தில் மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்படும் என்றும் திஸ்ஸ ஹேவா வித்தாரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.